நல்லூர் முருகனுக்கும் பொலிஸ் பாதுகாப்பு! - Yarl Thinakkural

நல்லூர் முருகனுக்கும் பொலிஸ் பாதுகாப்பு!

நாட்டில் இன்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலை அடுத்து யாழ்.நல்லூர் ஆலயத்திற்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

தற்போது நல்லூர் ஆலய வெளி வீதியில் குவிக்கப்பட்டுள்ள ஏராளமான பொலிஸார் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். 

குறிப்பாக நல்லூர் வெளி வீதியில் உள்ள வியாபார நிலையங்கள் மீதும் தீவிர சோதணை நடவடிக்கையினை மேற்கொண்டு வரும் பொலிஸார், வெளியில் இருந்து வருபவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், சந்தேகத்திற்கு இடமான முறையில் எவரேனும் நடமாடினால் தமக்கு தகவல் வழங்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Previous Post Next Post