உடனடியாக ஊரடங்கு சட்டம் அமுல்! - Yarl Thinakkural

உடனடியாக ஊரடங்கு சட்டம் அமுல்!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தொடர் குண்டுவெடிப்பால் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரையில் இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த போதும் தற்போது முதல் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீண்டும் அறிவிக்கும் வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post