இலங்கையில் குண்டுவெடிப்பை அடுத்து சென்னை எம்.ஜி.ஆர். மத்திய ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் மூன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உட்பட மொத்தம் 8இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த சம்பவத்துக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் குண்டுவெடிப்பை அடுத்து சென்னை எம்.ஜி.ஆர். மத்திய ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். ரயில் நிலையங்களில் பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளும் உடைமைகள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதி அளிக்கப்படுகிறது.
ரயில் நிலையத்தில் கேட்பாரற்று ஏதேனும் பொருட்களோ, பையோ இருந்தால் அங்கிருக்கும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறு பயணிகளை காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.