முப்படைகளும் விசாரணை களத்தில்! -ஜனாதிபதி அறிவிப்பு- - Yarl Thinakkural

முப்படைகளும் விசாரணை களத்தில்! -ஜனாதிபதி அறிவிப்பு-

நாட்டின் இன்ற ஞாயிற்றுக் கிழமை பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பினையடுத்து ஜனாதிபதி பெதுமக்களுக்கு விசேட அறிக்கையொன்றினை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளதாவது:-

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தினால் தான் ஆழ்ந்த கவலையில் ஆழ்ந்துள்ளதாகவும், எதிர்பாராத விதமாக இடம்பெற்ற இந்த சம்பம் தொடர்பான விசாரணைகளை முப்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த விசாரணைகளுக்கு பொது மக்கள் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் விசாரணை முன்னெடுக்கப்படும் கால கட்டத்தில் பொறுமை மற்றும் அமைதி காக்குமாறும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.
Previous Post Next Post