பொலிஸ் மீது தாக்குதல்! -குடும்ப பிணக்கை விசாரிக்க சென்றவேளை சம்பவம்- - Yarl Thinakkural

பொலிஸ் மீது தாக்குதல்! -குடும்ப பிணக்கை விசாரிக்க சென்றவேளை சம்பவம்-

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றில் நடந்த குடும்­ப சண்டையை விசா­ரிக்­கச் சென்ற பொலிஸ் அவலுவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான பொலிஸ் உத்தியோகஸ்தர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புலம்பெயர் நாடு ஒன்றிலிருந்து வந்த கண­வ­ருக்­கும், மனை­விக்­கும் இடையே முரண்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. அது தொடர்­பாக அச்­சு­வே­லிப் பொலி­ஸா­ருக்கு முறைப்­பாடு கிடைத்­துள்­ளது.

பதிவான முறைப்பாட்டின்படி விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அவர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரைப் பெண்­ணின் கண­வர் தாக்­கி­யுள்­ளார். சீரு­டை­யை­யும் கிழித்­துள்­ளார். தாக்­கு­த­லில் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் காய­ம­டைந்­தார். அவர் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார்.

தாக்­கு­தல் நடத்­தி­ய­வர் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். அவர் நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­ப­டு­வார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.
Previous Post Next Post