யாழ்.பெரிய கோயிலிலும் அஞ்சலி! - Yarl Thinakkural

யாழ்.பெரிய கோயிலிலும் அஞ்சலி!

நாட்டில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி பொது மக்களுக்காக பிரகடணம் செய்யப்பட்டுள்ள தேசிய துக்க நாளான இன்று யாழ்.பெரிய கோவிலில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது.

இவ் அஞ்சலி நிகழ்வின் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் தீபங்களை ஏற்றி அமைதி பிராத்தனை செய்ததுடன் ஆலயத்திற்குள் விசேட பிராத்தனையும் நடைபெற்றது.

இப்பிராத்தனையில் யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனால்ட், யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, குருமுதல்கள், பாடசாலை மாணவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு உளமார்ந்த அஞ்சலிகளை செலுத்தியருந்தனர்.


Previous Post Next Post