சாவகச்சேரியில் விபத்து! -காரை இடித்து நொருக்கிய பஸ்- - Yarl Thinakkural

சாவகச்சேரியில் விபத்து! -காரை இடித்து நொருக்கிய பஸ்-

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் சட்டத்தரணியுமான கேசவன் சயந்தனின் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.  

சாவகச்சேரி நகர்ப் பகுதிகளில் இன்று இரவு 10. 30  மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. 

காரை சாவகச்சேரி நகரில் தையல் நிலையத்திற்கு முன்பாக நிறுத்தி வைத்துவிட்டுச் சென்ற பின்னர் வேகக் கட்டுபாட்டை இழந்த மினிபஸ் கேசவன் சயந்தனின் காரை மோதித் தள்ளியது. இதனா‌ல் கார் மிகப் பலத்த சேதமடைந்துள்ளது. 

இவ் விபத்தின் போது மினி பஸ் சாரதி காயங்களுக்குள்ளாகி சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

விபத்து தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

Previous Post Next Post