சந்தேகத்திற்கிடமான வேன் சிக்கியது! -தொலை தொடர்பு உபகரணங்களும் மீட்ப்பு- - Yarl Thinakkural

சந்தேகத்திற்கிடமான வேன் சிக்கியது! -தொலை தொடர்பு உபகரணங்களும் மீட்ப்பு-

தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் வரக்காபொலவில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பயன்படுத்திய வேன் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

புலனாய்வு அதிகாரிகள், விசேட அதிரடிப்படையினர் மற்றும் வரக்காபொல பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய அங்குருவெல்ல பகுதியில் வீடொன்று சோதனையிடப்பட்ட நிலையில், அங்கிருந்து நபரொருவர் கைது செய்யப்பட்டார்.

இதன்போது அங்கிருந்து சந்தேகத்திற்கிடமான உந்துருளியொன்றும், தொலை தொடர்பு உபகரணங்கள் நான்கும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
Previous Post Next Post