பாதீட்டின் வாக்கெடுப்பு இன்று மாலை! - Yarl Thinakkural

பாதீட்டின் வாக்கெடுப்பு இன்று மாலை!

இவ்வாண்டுக்கான வரவு செலவுத்திட்ட 3ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவுள்ளது.

வரவு செலவு திட்டத்தின் குழு நிலை விவாதம் கடந்த 18 நாட்களாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் 19ஆவது நாளான இன்று வெள்ளிக்கிழமை நிதியமைச்சுக்கான வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடு குழுநிலை விவாதம் நடைபெறவுள்ளது.

இதனை தொடர்ந்து இன்று மாலை வரவு செலவுத்திட்ட 3ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மாலை இடம்பெறவுள்ளது.


Previous Post Next Post