தீவிரவாத தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி பொது மக்களுக்கு யாழ்.மாநகர சபையில் இன்று வியாழக்கிழமை காலை அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்.மாநகர சபை ஊழியர்கள், உறுப்பினர்கள் இணைந்து இவ் அஞ்சலி நிகழ்வினை நடத்தினர்.
மாநகர வளாகத்திற்குள் இன்று காலை ஒன்று கூடிய அவர்கள் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய மௌன பிராத்தனை நடத்தியும், தீபங்களை ஏற்றியும் அவர்கள் அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.