-கடற்கரை கபடி: சண்டிலிப்பாய் அணி சம்பியன்- - Yarl Thinakkural

-கடற்கரை கபடி: சண்டிலிப்பாய் அணி சம்பியன்-

யாழ்.மாவட்டத்திற்கு உட்பட்ட பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான பெண்களிற்கான கடற்கரை கபடி போட்டியில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக அணி சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை மைதானத்தில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக அணியை எதிர்த்து பருத்தித்துறை பிரதேச செயலக அணி மோதியது.

ஆட்டம் ஆரம்பம் முதல் தமது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சண்டிலிப்பாய் பிரதேச செயலக அணி 67:29 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது.

Previous Post Next Post