குமண பூங்காவிற்கு சுற்றுலா செய்யத தடை! - Yarl Thinakkural

குமண பூங்காவிற்கு சுற்றுலா செய்யத தடை!

குமண தேசிய பூங்காவின் சிறுத்தைகள் நடமாடும் பிரதேசம் சுற்றுலா பயணிகளுக்காக தற்காலிகமாக தடை செய்யப்பட்ட வலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளாகி ஊழியரொருவர் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பூங்காவின் பொறுப்பதிகாரி சிசிர குமார தெரிவித்தார்.

குமண தேசிய பூங்காவில் தற்போது 30 தொடக்கம் 40 வரையிலான சிறுத்தைகள் உள்ளன.

நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றுமொருவர் படுகாயமடைந்தார்.

பூங்காவில் இடம்பெறும் அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றில் பணியாற்றி வந்த ஊழியரொருவரே இவ்வாறு உ.யிரிழந்தாhர்.
Previous Post Next Post