தந்தை செல்வாவின் நினைவு தினத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி! - Yarl Thinakkural

தந்தை செல்வாவின் நினைவு தினத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி!

தந்தை செல்வாவின் நினைவு தினமும் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தீவிரவாத தற்கொலைத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்குமான நினைவேந்தல் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றன உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈஸ்வரபாதம் சரவணபவன், யாழ்.மாநக முதல்வர் இமானுவேல் ஆனால்ட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தந்தை செல்வாவின் சதுக்கத்தில் உள்ள சமாதிக்கு மேல் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் தீவிரவாத தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்காக தீபங்களை ஏற்றியும், அமைதியாக நின்றும் பிராத்தனையில் ஈடுபட்டனர்.Previous Post Next Post