யாழ். முஸ்லிம் பகுதி சுற்றிவளைப்பு - Yarl Thinakkural

யாழ். முஸ்லிம் பகுதி சுற்றிவளைப்புயாழ்.நாவாந்துறை பகுதியில் இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இன்று அதிகாலை 4.30மணி முதல் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாட்டில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகள், சுற்றிவளைப்புகள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று அதிகாலை 4.30 மணியளவில் நாவாந்துறை, ஐந்து சந்தி பகுதிகளில் இராணுவம், மற்றும் விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் இணைந்து அந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளது.

அத்துடன் இந்த பகுதக்குள் செல்வதும், அங்கிருந்து வெளியே செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளதுடன், வீடுகள், வாகனங்கள், வர்த்தக நிலையங்கள் அனைத்தும் சல்லடை போட்டு தேடப்பட்டு வருகின்றது.
Previous Post Next Post