கொடிகாமத்தில் இலஞ்சத்திற்காக சட்டத்தை மிதிக்கும் பொலிசாரின் லீலைகள்! - Yarl Thinakkural

கொடிகாமத்தில் இலஞ்சத்திற்காக சட்டத்தை மிதிக்கும் பொலிசாரின் லீலைகள்!


கடந்த சித்திரைப்புத்தாண்டு தினத்தன்று வரணி இயற்றாலைப் பகுதியில் மீசாலை வீரசிங்கம் படாசாலை மாணவன் மீது வாள் வெட்டுத்தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது.

 வாள் வெட்டுத்தாக்குதலுக்கு இலக்கான மாணவனுக்கு 32 தையல்கள் இடப்பட்டது

குறித்த மாணவனால் தன் மீது தாக்குதல் நடாத்தியதாக  வைத்தியசாலையில் வைத்து நால்வரின் பெயரை பொலிசரிடம் தெரிவித்திருந்தார்.

மாணவனால் தெரிவிக்கப்பட்ட நால்வரும் நேற்றய தினம் கொடிகாமாம் பொலிசாரிடம் சரணடைந்திருந்தனர்.

சரணடைந்திருந்த நால்வரில் இருவர் அண்மையில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசிய குற்றாச்சாட்டில் சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுதலையானவர்கள்.

தாக்குதலுக்கு இலக்கான மாண்வன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நேற்றய தினம் சரணடைந்த நால்வரையும் கொடிகாமம் பொலிசார் நீதிமன்றத்திற்கு முற்படுத்தாமல் இலஞ்சம் வாங்கிக்கொண்டு சட்டத்திற்கு முரணான வகையில் பொலிஸ் பிணையில் விடுதலை செய்துள்ளனர்.

கொடிகாமம் பொலிசார் போதைப்பொருள், கள்ள மணல், மற்றும் வாள் வெட்டு உள்ளிட்ட  குற்றவாளிகளை பெருமளவு இலஞ்சம் வாங்கிக்கொண்டு காப்பாற்றுகின்றனர் எனத் தெரிய வருகின்றது.

இதுமாதிரியான இலஞ்சம் வாங்கி குற்றவாளிகளை பொலிசார் காப்பற்றுவதாலேயே யாழ் குடாநாட்டில் குற்றச்செயல்கள் அதிகரிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post