ஆட்டோவில் நடமாடும் பியர் விற்பனை! -இருவர் வசமாக சிக்கினர்- - Yarl Thinakkural

ஆட்டோவில் நடமாடும் பியர் விற்பனை! -இருவர் வசமாக சிக்கினர்-

யாழ்ப்பாணம் - நெல்லியடி பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றை சோதணையிட்ட பொலிஸார் அதற்குள் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி பியர் ரின்களை மீட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் முச்சக்கர வண்டி உரிமையாளர் மற்றும் அதில் இருந்தவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புது வருடத்தை முன்னிட்டு 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.

எனினும் சட்டவிரோதமாக பியர் கடத்தப்படுவதாக நெல்லியடி பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

இந்த நிலையில் 13ஆம் திகதி அதிகாலை ஒரு மணியளவில் யாழ்ப்பாணம் நெல்லியடி நகர் ஊடாக சென்ற முச்சக்கரவண்டி ஒன்றை மறித்து பொலிஸார் சோதனையிட்டனர்.

அதில் 85 பியர் ரின்கள் மீட்கப்பட்டதாகவும் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Previous Post Next Post