யாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்! - Yarl Thinakkural

யாழில் பாதுகாப்பை தீவிரப்படுத்தும் பொலிஸார்!

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கயில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். 


குறிப்பாக பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும், அவர்களை விழிப்படைய செய்யும் வகையிலும் பொலிஸார் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

வீதிகளில் ஒலிபெருக்கி வாகனங்களுடன் செல்லும் பொலிஸார், கிராம மக்களை தவிர்ந்த புதுமுகம் கொண்ட நபர்களை கண்டாலும், சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி திரிபவர்கள் தொடர்பிலும் பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர். 

இதுமட்டுமல்லாமல் பொது இடங்களில் கூட்டமாக நிற்க வேண்டாம் என்றும், வீடுகளுக்குள் இருக்குமாறும் பொலிஸார் பொது மக்களை அறிவுறுத்தி வருகின்றனர். 
Previous Post Next Post