யாழில் வீடு புகுந்து தாக்குதல்! -மூவரை கைது செய்த பொலிஸ்- - Yarl Thinakkural

யாழில் வீடு புகுந்து தாக்குதல்! -மூவரை கைது செய்த பொலிஸ்-

யாழ்ப்பாணம் மானிப்பாய் மற்றும் நவாலி பகுதிகளில் உள்ள இரண்டு வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட 3 பேர் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அண்மையாகவுள்ள வீடு மற்றும் நவாலி அரசடியிலுள்ள வீடு ஆகியவற்றுக்குள் கடந்த சனிக்கிழமை இரவு புகுந்த கும்பல் ஒன்று அடாவடியில் ஈடுபட்டது.

நவாலி அரசடி வீதியிலுள்ள கிருஷ்ணா என்பவருடைய வீட்டுக்குள் புகுந்த கும்பல் தந்தையும் மகனையும் வெட்டிக் காயப்படுத்தியதுடன் வீட்டிலிருந்த பொருள்களையும் அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்தது.

அத்துடன், மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அண்மையாகவுள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் அங்கு யன்னல்கள், கதவுகள் மற்றும் பொருள்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்தது.

இந்த நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இளைஞர் ஒருவரைக் கைது செய்தனர். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் இரண்டு இளைஞர்களை இன்று காலை கைது செய்தனர்.

நவாலி அட்டகிரியைச் சேர்ந்த இருவரும் உடுவிலைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
Previous Post Next Post