நடு வீதியில் போதையில் தள்ளாடிய பொலிஸார்! - Yarl Thinakkural

நடு வீதியில் போதையில் தள்ளாடிய பொலிஸார்!

உச்சர போதையில் மோட்டார் சைக்கில் ஓட்டிய பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் வீதியில் வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக தெல்லிப்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளானர்.

பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார்  சுன்னாகம் பகு­தி­ நோக்கி மோட்டார் சைக்கிலில் பய­ணித்த போது எதிரில் வந்த பெண் ஆசிரியரை மோதித்தள்ளி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

இதன்­போது வீழ்ந்த இரு பொலி­சா­ரும் மருத்­து­வ­ம­னை­யில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவ மனைக்கு சென்ற போதும் இரு பொலிஸாருக்கும் போதை தனியாத காரணத்தால் அங்கிருந்த அலுவலகர்களுடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இத­னை­ய­டுத்து அங்கு பணி­பு­ரி­யும் சிங்­க­ள­மொழி தாதி­யர்­கள் உதவ முற்­பட்­ட­போ­தும் அவர்­க­ளை­யும் தகாத வார்த்­தை­க­ளால் ஏசியதால் குறித்த தாதி­யர்­க­ளும் ஒதுங்­கிக் கொண்­ட­னர்.

இந்த விட­யம் மருத்­து­வ­ம­னை­யின் பணிப்­பா­ள­ரின் கவ­னத்­துக்­கும் கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளது.
Previous Post Next Post