புதன்கிழமை துக்க நாள்! -கூட்டமைப்பு பிரகடனம்- - Yarl Thinakkural

புதன்கிழமை துக்க நாள்! -கூட்டமைப்பு பிரகடனம்-

நாட்டில் நடைபெற்ற குண்டுத்தாக்குதலுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார்.

துக்கத்தை பகிர்வதற்காக புதன் கிழமை துக்க நாளா பிரகடனம் செய்துள்ளதாகவும் அவர் மேலும் தகவல் வெளியிட்டார்.

அவர் இன்று திங்கட்கிழமை காலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது-

கிறிஸ்த்து உயிர்த்த ஸ்ட்ர் கொண்டாட்ட நாளில் கொழும்பிலும் அதனை சுழ்நத பிரதேசங்களிலும் மற்றும் மட்டக்களபு மாவட்டத்திலும் தேவாலங்கள், ஹோட்டல்களில் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதல் சம்பவத்தில் நூற்றுக்கணக்கான இலங்கை மக்களும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும்
கொல்லப்பட்டும், காயமடைந்தும் உள்ளனர்.

இவ்வாறு பயங்கரவாத நடவடிக்கைகள் இடம்பெறப் போகிறதென இலங்கை பாதுகாப்பு உளவுத்துறைக்குத் தகவல்கள்
கிடைத்துள்ளன.

அரசு பாதுகாப்புத்துறை இவ்விடயங்களில் முன்கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளது.

இத்தகைய செயல்களை மட்டுமல்ல உளவுத்துறையின் செயலற்ற நிலமைகளையும் குறிப்பிட வேண்டும்.

இப் பயங்கரச் செயல்களால் மரணமடைந்த, காயமடைந்த, இழப்புக்களைச் சந்தித்துத் துயரத்தில் வீழ்ந்து கிடக்கும்
குடும்பங்களுடன் துயர்பகிர வேண்டியது எமது மனிதாபிமானக் கடமையாகும்.

இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்க்க வேண்டும். கண்டனம் தெரிவிக்க வேண்டும். இனியொரு இத்தகைய நிகழ்வுகள் நடைபெறாமல் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என வற்புறுத்துவோம்.

இத்தகைய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக மனிதாபிமானமிக்க மனிதர்கள் ஒன்றாக ஒற்றுமையாக எம் கண்டனத்தை வெளிப்படுத்துவோம்.

இது தொடர்பில் ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடுவோம்.
அவலத்தில் .வீழ்ந்து இழப்புக்களால் துயருறும் மக்களுடன் நாம் அவர்கள் கண்ணீரில் கலந்து துயரத்தைப்
பகிர்ந்து கொள்ளும் பொருட்டு 2019-04-24 ஆம் நாள் புதன்கிழமை துக்க நாளாகக் கடைப்பிடிப்போம் என்றார்.
Previous Post Next Post