வைத்தியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சுகாதார அமைச்சு! - Yarl Thinakkural

வைத்தியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சுகாதார அமைச்சு!

நாட்டில் உள்ள வைத்திய சாலைகளில் பணியாற்றும் விசேட வைத்திய நிபுணர்கள், தங்களை அணுகுகின்ற நோயாளர்களுடன் குறைந்த பட்சம் 10 நிமிடத்தையேனும் கழிக்க வேண்டும் என்ற சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.

இச் சட்டத்தினை அமுலாக்கும் நடவடிக்கையில் சுகாதார அமைச்சு மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.

இதன்படி சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு விலைவில் வெளியிடப்படும் என்றும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரச வைத்தியசாலைகளில் நோயாளர்களை பரிசோதிக்கும் விசேட வைத்தியநிபுர்ணகள் குறைந்த பட்சம் 10 நிமிடங்கள் நோயாளருடன் செலவிடுகிறாரா என்பதை கண்காணிப்பதற்கான விசேட கருவி ஒன்றும் பொருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Previous Post Next Post