Sunday, April 14, 2019

பட்டாசு விற்பனை வீழ்ச்சி!

பட்டாசு கொள்வனவு கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருட புத்தாண்டு காலப்பகுதியில் வீழ்ச்சி அடைந்திருப்பதாக இலங்கை பட்டாசு தயாரிப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தின் ஏப்ரல் மாதமளவில் பட்டாசுப் பொருட்களின் கொள்வனவு உயர் மட்டத்தில் காணப்பட்டது.

இருப்பினும் இவ்வாண்டு கொள்வனவு வீழ்ச்சியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் புத்தாண்டை வரவேற்பதற்காக நள்ளிரவு 12 மணியளவில் அதிகளவாக பட்டாசு வெடிச் சத்தங்கள் கேட்கும்.

ஆனால் இவ்வருடம் அதிகளவாக பட்டாசு வெடிச் சத்தங்களை கேட்க முடியவில்லை.

Author: verified_user