வெப்பத்தால் வைரஸ் தொற்று! -சுகாதார துறை எச்சரிக்கை- - Yarl Thinakkural

வெப்பத்தால் வைரஸ் தொற்று! -சுகாதார துறை எச்சரிக்கை-

நாட்டில் அதிகரித்துள்ள வெப்பம் காரணமாக 'இன்புளுவன்சா - ஏ' உட்பட வைரஸ் காய்ச்சல்களும், சரும நோய்களும் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து விளக்கமளித்துள்ள சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா,  தற்போதைய நாட்களில் இலங்கைக்கு சூரியன் உச்சம் கொடுப்பதால் பொதுமக்களுக்கு நோய்த்தாக்கம் ஏற்படும் நிலைமை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக குழந்தைகள், பெரியோர்களுக்கு நோய்த்தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் உள்ளன.

சரும நோய்கள், காய்ச்சல் மற்றும் இன்புளுவன்சா உள்ளிட்ட வைரஸ் தாக்கம் என்ன ஏற்படும் நிலைமை உள்ளது.

எனவே, பொதுக்கள் தற்போதைய வெப்பமான வானிலை நிலைமையின் காரணமாக அதிகளவு நீரை அருந்துவதுடன், ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் நீராடுவதன் ஊடாக சரும நோய்த் தாக்கங்களைத் தவிர்க்க முடியும்.

அத்துடன், பாதுகாப்பான உணவு முறைகள் மற்றும் பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் தொற்று நோய்களையும் தவிர்க்க முடியும் என்று சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post