யாழ்.பல்கலையில் கழிவொயில் தாக்குதல்! - Yarl Thinakkural

யாழ்.பல்கலையில் கழிவொயில் தாக்குதல்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள உத்தியோகத்தர்களின் வரவு மற்றும் மீள்செல்கை கைவிரல் ரேகை இடும் இயந்திரங்கள் மூன்று கழிவு ஒயில் ஊற்றப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன என்று பல்கலைக்கழக பதிவாளர் காண்டீபன், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

இந்த முறைப்பாடு இன்று  திங்கட்கிழமை பதிவு செய்யப்பட்டது. 
பல்கலைக்கழக வளாகத்தில் நிர்வாக மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த கைவிரல் ரேகை இயந்திரங்களே இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளன. அவை இன்றைய தினம் இயங்கவில்லை என்று முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாதுகாப்பு உத்தியோகத்தர், நியமிக்கப்பட்ட நிலையில் எவ்வாறு சேதமாக்கப்பட்டது பற்றி பாதுகாப்பு உத்தியோகத்தரை விசாரணை செய்தால் உடைத்தவர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியுமென்றும் முறைப்பாட்டில் பதிவாளர் குறிப்பிட்டுள்ளார். 

முறைப்பாட்டின் பிரகாரம் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post