இலங்கை வருகிறது இன்டர்போல்! - Yarl Thinakkural

இலங்கை வருகிறது இன்டர்போல்!

நாட்டில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடாத்துவதற்காக இன்டர்போன் (சர்வதேச பொலிஸ் குழு ஒன்று வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்யவும், குற்றவாளிகளை கைது செய்யவும் சர்வதேச பொலிஸார் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக இன்டர்போல் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.

இதற்காக சர்வதேச பொலிஸாரினால் வழங்கக்கூடிய அனைத்து தகவல்களையும் வழங்குவதாகவும், 24 மணித்தியாலயங்களும் நடைமுறையில் உள்ள தொலைபேசி மத்திய நிலையம் ஒன்றை விசாரணை நடவடிக்கைகளுக்காக தாங்கள் விருப்பம் தெரிவிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post