7 பேர் கைது! -அதிகமான தாக்குதல் தற்கொலை தாக்குதல்- - Yarl Thinakkural

7 பேர் கைது! -அதிகமான தாக்குதல் தற்கொலை தாக்குதல்-

நாட்டின் 9 இடங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெரும்பாலனவை தற்கொலைத் தாக்குதல்களாகவே இடம்பெற்றுள்ளன என்று பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்தார்.
இந்த தாக்குதல்களின் பின்னணியில் ஒரு குழு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், தெமட்டகொட பகுதியில் ஒருவரை சோதனையிட முற்பட்ட போது, அவர் குண்டை வெடிக்க வைத்ததால் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உள்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்தனர் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post