வட்டுக்கோட்டையில் 7 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் கைது! - Yarl Thinakkural

வட்டுக்கோட்டையில் 7 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் கைது!

யாழ்ப்பாணம் வட்டுகோட்டை - சித்தன்கேணி பகுதியில் கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

போதை பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் வசமிருந்து 7 கிலோ 200 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் மேலும் தெரிவித்தார்.

21 வயதுடைய மாதகல் பகுதியை சேர்ந்த சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post