பாகிஸ்தானிகள் 6 பேர் கைது! - Yarl Thinakkural

பாகிஸ்தானிகள் 6 பேர் கைது!

நாட்டின் நீர்கொழும்பு அட்நிவுஸ் வீதியில் மற்றும் பெரியமுல்லை பகுதியில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த பாகிஸ்தான் நாட்டு பிரஜைகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

18, 23, 24 மற்றும் 25 வயதுடைய பாகிஸ்தான் நாட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post