நாட்டின் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட 8 தொடர் குண்டுத் தாக்குதல்களில் 6 தாக்குதல் சம்பவங்கள் தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவம் என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இத்தகவலை அரச பகுப்பாய்வாளர்கள் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ளார்கள்.
குறிப்பாக கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம் மற்றும் ஷங்கரில்லா, சினமன் கிரேண்ட், கிங்ஸ்பெரி ஹொட்டல் போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களே இவ்வாறு தற்கொலை குண்டுத் தாக்குதல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.