மதூசின் உறவினர் உட்பட 6 பேர் இலங்கைக்கு நாடு கடத்தல்! - Yarl Thinakkural

மதூசின் உறவினர் உட்பட 6 பேர் இலங்கைக்கு நாடு கடத்தல்!

டுபாயில் வைத்து மாகத்துரே மதுசுடன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த அவருடைய உறவினர் உட்பட 6 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

நாடு கடத்தப்பட்ட அவர்கள் இன்று புதன் கிழமை அதிகாலை 4.45 மணியவில் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து குற்ற புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

முன்னர் மாகந்துரே மதூவுடன் கைதானவர்களுள் 15 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், இன்று 6 பேர் நாடு கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post