சிறுமிக்கு பாலியல் தொல்லை! -பாதிரியாருக்கு 6 வருட சிறை- - Yarl Thinakkural

சிறுமிக்கு பாலியல் தொல்லை! -பாதிரியாருக்கு 6 வருட சிறை-

அமெரிக்க நாட்டின் தெற்கு டகோட்டா மாகாணத்தில் ரேபிட் நகர தேவாலயத்தில் ரோமன் கத்தோலிக்க பாதிரியாராக பணியாற்றி வந்தவர் ஜான் பிரவீன் (வயது 38). இந்தியரான இவரது சொந்த ஊர் ஐதராபாத்.

இவர் கடந்த ஆண்டு தனது தேவாலயத்தில் 13 வயது சிறுமிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக ஜான் பிரவீன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்றபோது அவர் தன்மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தண்டனைக்காக அவர் நேற்று முன்தினம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு அதிகபட்சம் ஓராண்டு காலம் சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால் நீதிபதி ஸ்டீவன் மாண்டெல் அவருக்கு 6 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். அவர் ஏற்கனவே சிறையில் இருந்த 178 நாட்கள் தண்டனையில் கழிக்கப்படும்.

அவர் 3 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் பரோலில் விடுதலை செய்யப்படலாம். அப்படி அவர் பரோலில் விடுவிக்கப்பட்டால், அவரை உள்நாட்டு பாதுகாப்புத்துறை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன. கோர்ட்டில் தனது குற்றத்துக்காக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் அவர் மன்னிப்பு கேட்டார்.
Previous Post Next Post