அரபு மொழி பதாகைகள் 500 மீட்பு! - Yarl Thinakkural

அரபு மொழி பதாகைகள் 500 மீட்பு!

கற்பிட்டி – புதுக்குடியிருப்பு பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரபு மொழியில் எழுத்தப்பட்ட 500க்கும் அதிகமான பதாதைகள் மற்றும் கஞ்சா ஒரு தொகையுடனும் சந்தேகநபர்கள் 2 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றுக்கு அமைய அரபு மொழியில் எழுத்துப்பட்டிருந்த பதாதைகள் தொகையொன்று அதற்கு முந்தைய தினம் கற்பிட்டி பிரதேசத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை , அம்பாறை - இலக்கம் 01 மாவத்தையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தனது கைப்பேசி ஊடாக கடந்த தினத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களுடன் தொடர்புடைய புகைப்படங்களை வேறு சிலருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Previous Post Next Post