ஆலய உணவில் விசம்! -42 பேர் வைத்திய சாலையில்- - Yarl Thinakkural

ஆலய உணவில் விசம்! -42 பேர் வைத்திய சாலையில்-

ஆலயம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவு விஷமானதால் 42 பேர் மஸ்கெலிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நல்லதண்ணி – லக்ஷ்பான தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பிள்ளைகளுமே இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அந்த தோட்டத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் நேற்றைய தினம் வழங்கப்பட்ட அன்னதானத்தின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 7 குழந்தைகளும் அடங்குவதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அவர்களின் நிலைமை பாரதூரமாக இல்லை என நல்லதண்ணி காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உணவு விஷமானமை தொடர்பில் மஸ்கெலிய சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Previous Post Next Post