4 நாட்களில் 31 விபத்துக்கள்! -42 பேர் சாவு- - Yarl Thinakkural

4 நாட்களில் 31 விபத்துக்கள்! -42 பேர் சாவு-

கடந்த நாட்களில் நாட்டில் இடம்பெற்ற பல்வேறு வாகன விபத்து சம்பவங்களில் மட்டும் 42 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலமையகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 13 ஆம் திகதி சனிக்கிழமையில் இருந்து நேற்று காலை ஆறுமணி வரையான காலப்பகுதியில் மட்டும் 31 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளது.
இதில் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஏராளமானவர்கள் மோசமான காணங்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் வைத்திய சாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
Previous Post Next Post