இன்று 3 நிமிட அஞ்சலி! - Yarl Thinakkural

இன்று 3 நிமிட அஞ்சலி!

தீவிரவாத தொடர் குண்டுத் தாக்குதலில் கொலை செய்யப்பட்ட அப்பாவி பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த உயிர்ப்பு ஞாயிறுதினத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்கள் மற்றும் தாக்குதலைக் கண்டித்து இன்றையதினம் 23 ஆம் திகதி தேசிய துக்கதினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இன்று செவ்வாக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து 8.33 வரையான 3 நிமிட நேரம் அனைத்து மக்களும் இணைந்து மௌன அஞ்சலி செலத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Previous Post Next Post