யாழ்ப்பாணம் குருநகர் கடல் பகுதியில் கடலாமை பிடித்துக்கொண்டிருந்த 3 பேர் கையும் மெய்யுமாக கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வழமையான ரோந்து நடவடிக்கைகளில் கடற்படை ஈடுபட்டிருந்த போது குருநகர் பகுதியினை சேர்ந்த அவர்கள் கடல் ஆமை பிடித்துக்கொண்டு இருந்துள்ளனர்.
உடனடியாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் கடற்படை முகாமில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.