விளையாட்டுத்துறை பயிற்சியாளர்கள் 3,850 பேருக்கு நியமனம்! - Yarl Thinakkural

விளையாட்டுத்துறை பயிற்சியாளர்கள் 3,850 பேருக்கு நியமனம்!

நாட்டில் புதிதாக விளையாட்டுத் துறைப் பயிற்சியாளர்கள் மூவாயிரத்து 850 பேர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் விளையாட்டுத் துறையில் திறமை காட்டிய பாடசாலை மாணவ மாணவியருக்கு வர்ண விருது அளிக்கும் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.

இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

தற்போதைய பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க கல்வி அமைச்சராக கடமையாற்றிய காலப்பகுதியில் தேசிய பாடசாலை விளையாட்டு விழாவை அறிமுகப்படுத்திய விதத்தை நினைவுகூர்ந்தார்.

இதன் மூலம் திறமையான போட்டியாளர்கள் உருவானார்கள். கிராமப்புற திறமைகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கப்பட்டது என அவர் மேலும் கூறினார்.
Previous Post Next Post