போட்டு தாக்கிய மலிங்க-பாண்டியா! -சென்னை 37 ஓட்டங்களால் தோல்வி- - Yarl Thinakkural

போட்டு தாக்கிய மலிங்க-பாண்டியா! -சென்னை 37 ஓட்டங்களால் தோல்வி-

இந்தியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி 37 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது

நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களை பெற்றது.

மும்பை அணி சார்பில் சூர்யகுமார் யாதவ் 43 பந்துகளில் 59 ஓட்டங்களை அதிகூடுதல் ஓட்டங்களாக பெற்றுக் கொடுத்தார்.

இதையடுத்து 171 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் சென்னை அணி சார்பில் கேதர் யாதவ் 54 பந்துகளில் 58 ஓட்டங்களை அதிகூடிய ஓட்டங்களாக பெற்றுக் கொடுத்தார்

மும்பை அணி சார்பில் பந்துவீச்சில் லசித் மலிங்க மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். போட்டியின் ஆட்ட நாயகனாக ஹர்திக் பாண்டியா தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியானது முன்பை இந்நதியன்ஸ் அணியின் நூறாவது வெற்றி என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் , ஐபிஎல் போட்டிகளில் 100 வெற்றிகளை பெற்ற முதல் அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post