உயிரிழந்தவர்களின் தொகை 321 ஆக அதிகரிப்பு! - Yarl Thinakkural

உயிரிழந்தவர்களின் தொகை 321 ஆக அதிகரிப்பு!

கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் இடம்பெற்ற தீவிரவாத குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் தொகை 321 ஆக அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன் தகவல் வெளியிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாக்கிழமை நடைபெற்றுவரும் விஷேட அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் 38 வெளிநாட்டு பிரஜைகளும் உள்ளடங்குவதாக தெரிவித்த அவர், 500 மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 375 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post