30 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 207 பேர் சாவு! -450 பேர் காயம்- - Yarl Thinakkural

30 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 207 பேர் சாவு! -450 பேர் காயம்-

இன்று நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் 207 பேர் உயிரிழந்துள்ளதுடன் 450 பேர்வரை படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று மாலை 5.30 மணிவரையான காலப்பகுதியிலேயே இந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் 30 வெளிநாட்டவர்களும் 3 பொலிஸ் உத்தியோகத்தர்களும் அடங்குகின்றனர்.

மட்டக்களப்பு வைத்தியசாலையில் 28 பேரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 66 பேரும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் 104 பேரும் களுபோவில வைத்தியசாலையில் 2 பேரும் ராகம வைத்தியசாலையில் 7 பேருமாக 207 பேரின் சடலங்கள் வைக்கப்பட்டுள்ளன.

உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இதேவேளை உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களை அறிவதற்கு 011322485 என்ற சிறப்பு தொலைபேசிக்கு அழைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post