கனடா செல்ல முற்பட்ட 26 பேர் கைது ! -கிளிநொச்சியில் சம்பவம்- - Yarl Thinakkural

கனடா செல்ல முற்பட்ட 26 பேர் கைது ! -கிளிநொச்சியில் சம்பவம்-

கிளிநொச்சி - கனகபுரத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் கனடாவிற்குச் செல்ல இருந்த 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சிறப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்ட போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னர் அவர்கள் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் மேற்கெள்ளப்பட்டுள்ளது.
Previous Post Next Post