அவசரமாக நாடு திரும்பினார் மைத்திரி! -24 மணி நேரத்தில் விசேட கூட்டம்- - Yarl Thinakkural

அவசரமாக நாடு திரும்பினார் மைத்திரி! -24 மணி நேரத்தில் விசேட கூட்டம்-

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கான காரணங்களையும், அதன் பின்னணியையும் கண்டறிவதற்கு 24 மணித்தியாலங்களுக்குள் விசேட குழு ஒன்று நியமிக்கப்பம் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிப்பதற்காக, உயர் நீதிமன்ற நீதியரசர் உள்ளிட்ட விசேட விசாரணைக் குழு அமைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தியா மற்றும் சிங்கப்பூருக்கு மேற்கொண்டிருந்த விஜயங்களை நிறைவு செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு மீளவும் நாடு திரும்பியுள்ளார்.

நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான எஸ்.கியூ-468 ரக விமானம் ஊடாக ஜனாதிபதி நாடு திரும்பியதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post