24 மணிநேரம்: 2 நாடுகள்: 10 விக்கெட் வீழ்த்தி அசத்திய மலிங்கா! - Yarl Thinakkural

24 மணிநேரம்: 2 நாடுகள்: 10 விக்கெட் வீழ்த்தி அசத்திய மலிங்கா!

இலங்கை அணியின் ஒருநாள் போட்டி கேப்டன் லசித் மலிங்கா 24 மணி நேரத்துக்குள் இந்தியாவில் ஐபிஎல் போட்டியிலும்  இலங்கையில் உள்ளூர் போட்டியிலும் ஆடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

35 வயதான மலிங்கா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளையும், கண்டியில் நடந்த உள்ளூர் போட்டிகளில் 9.5 ஓவர்கள் வீசி 49 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது உள்ளூர் போட்டிகளில் அவரது சிறந்த பந்துவீச்சாகும்.

அதேசமயம் வீரர்களின் வேலைப்பளுவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பதால் ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு எடுத்துக்கொண்டு பாதியில் நாடு திரும்பினார் மலிங்கா.

புதனன்று சென்னை, மும்பை இடையே நடந்த ஐபிஎல் போட்டியில் கேதர் ஜாதவ், வாட்சன், ப்ராவோ விக்கெட்டுகளை மலிங்கா வீழ்த்தி, சென்னை அணி முதல் தோல்வியை பெற காரணமாக இருந்தார்.

இந்த போட்டி முடிந்ததும் ஒருநாள் போட்டிக்கு தயாராகும் விதமாக இலங்கை உள்ளூர் போட்டிகளில் ஆட யோசித்தார். அதன்படி காலே அணிக்காக தலைமை தாங்கினார் மலிங்கா.

காலி , கண்டி அணியை 156 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டி மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்ற 10வது மணி நேரத்தில் ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.

முதல் ஸ்பெல்லில் நான்கு ஓவர்கள் வீசி 4ஃ13 என்றிருந்த மலிங்கா இறுதியில் 9.5 ஓவர்கள் வீசி 49 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை மும்பை இந்தியன்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் என்னதான் அவர் காலி ஜெர்ஸி அணிந்திருந்தாலும்  மும்பை தொப்பியை தான் அணிந்துள்ளார் என்று கூறியிருந்தது.
Previous Post Next Post