எல்லைதாண்டிய 18 இந்திய மீனவர்கள் கைது! - Yarl Thinakkural

எல்லைதாண்டிய 18 இந்திய மீனவர்கள் கைது!

நாட்டின் வடக்கு கடற் பரப்பில் அனுமதியின்றி சட்ட விரோதமான முறையில் 3 படகுகளில் உட்பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட  18 இந்திய  மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகள் வடக்கு கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் பின் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post