பொலிஸ் அதிகாரிகள் 13 பேருக்கு வழங்கிய இடமாற்றம் இரத்து! - Yarl Thinakkural

பொலிஸ் அதிகாரிகள் 13 பேருக்கு வழங்கிய இடமாற்றம் இரத்து!

13 பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் உடனடி அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இடமாற்றம் வழங்கப்பட்டவர்களில் 02 சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், 04 பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பொலிஸ் அத்தியட்சகளர்கள் 07 பேரும் அடங்குகின்றனர்.

தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற விசாரணைகளுக்கு தடையாக அமையும் என்ற காரணத்தால் இந்த இடமாற்றங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
Previous Post Next Post