11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு! -நீதிமன்றில் வெளியானது இரகசிய தகவல்- - Yarl Thinakkural

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு! -நீதிமன்றில் வெளியானது இரகசிய தகவல்-

நீதிமன்றத்தால் பிடியாணைப் பிறப்பிக்கப்பட்ட லெஃப்டின் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சியை கடற்படைத் தலைமையகத்தில் மறைந்திருக்க பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன உதவியமை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று புதன்கிழமை நீதிமன்றில் தெரிவித்தது.

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கு விசாரணைகளின் போது மன்றில் தோண்றிய குற்றத் தடுப்பு பிரிவனரே மேற்படி விடயத்தை மன்றுரைத்துள்ளனர்.

சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி மறைந்திருப்பதற்கு, அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன உதவினார் என்பதற்கு அவரது மனைவிமாரிடம் பெற்ற வாக்குமூலங்கள் உறுதி செய்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்
Previous Post Next Post