O/L பெறுபேறு நாளை அதிகாலைக்கு முன்னர்! - Yarl Thinakkural

O/L பெறுபேறு நாளை அதிகாலைக்கு முன்னர்!

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வி பொது தரப சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் நாளை அதிகாலை வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த எமது செய்தி பிரிவுக்கு சற்று முன்னர் தெரிவித்தார்.

பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் றறற.னுழநnநெவள.டமஃநஒயஅ  என்ற இணையத்தளத்தின் மூலம் அறிந்துக் கொள்ள முடியும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சாதாரண தர பரீட்சையில் 6, 56, 641 பரீட்சார்த்திகள் தோற்றினர். நாடு முழுவதிலும் இடம்பெற்றிருந்த 4661 பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சை இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post