Monday, March 25, 2019

O/L பெறுபேறு 28 ஆம் திகதி வெளிவரும்!

க.போ.த சாதாரண தர பரீட்சைகளுக்கான பெறுபேறுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வியாழக்கிழமை அன்று வெளியிட கூடியதாக இருக்கும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதி கட்ட நடவடிக்கைகள் தற்பொழுது நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்

கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சாதாரண தர பரீட்சையில் 6 இலட்சத்தி 56 ஆயிரத்து 641 பரீட்சார்த்திகள் தோற்றினர்.

நாடு முழுவதிலும் இடம்பெற்றிருந்த 4661 பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சை இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.


Author: verified_user