யாழ் - பொன்னாலை வீதிக்கு விடிவு! -புணரமைக்க அமைச்சரவை முடிவு- - Yarl Thinakkural

யாழ் - பொன்னாலை வீதிக்கு விடிவு! -புணரமைக்க அமைச்சரவை முடிவு-

யாழ்பாணத்தில் இருந்து பொன்னாலை வரையிலும் யாழ்ப்பாணம் - பொன்னாலை - பருத்தித்துறை (AB21 ) வீதியை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் தொடர்பான நடவடிக்கைக்கு அரசாங்கத்தில் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானத்தில் இது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது.

மூலோபாய வியூக வீதி நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழான உப திட்டமாக வகுக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்திலிருந்து பொன்னாலை வரையிலும் யாழ்ப்பாணம் பொன்னாலையில் இருந்து பருத்தித்துறை வரையிலான வீதியில் 1.83 கிலோமீற்றர் தொடக்கம் 14.6 கிலோமீற்றர் வரையிலான வீதியை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துவதற்கான சிவில் பணி ஒப்பந்தம் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய வரையறுக்கப்பட்ட (Sierra construction) நிறுவனத்திடம் வழங்குவதற்காக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சமரப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Previous Post Next Post