போயிங் விமானங்களை நிறுத்திய சீனா - Yarl Thinakkural

போயிங் விமானங்களை நிறுத்திய சீனாஎதியோப்பாவில் நடந்த கோர விபத்தை தொடர்ந்து போயிங் மேக்ஸ்-8 ரக விமானங்கள் அனைத்தையும் தரையிறக்கி நிறுத்தி வைக்குமாறு சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

இதே ரக விமானம் ஒன்று இந்தியோனேசியா அருகே கடலில் விழுந்து நொருங்கி 190 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்த ஐந்து மாதங்களுக்குள் நடந்தது. இந்நிலையில் எதியோப்ப அரசுக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ்-8’ விமானம்  நேற்று காலை கென்யா நோக்கி புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் போயிங் 737 மேக்ஸ்-8’ ரக விமானங்கள் அனைத்தையும் உடனடியாக தரையிறக்கி வர்த்தக ரீதியிலான சேவையை நிறுத்தி வைக்குமாறு சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

Previous Post Next Post